பத்ம விருது வென்ற மருத்துவர் ரமணியுடன் ஓர் உரையாடல்

இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழை எளியோர் வாழ்வில் இலவச கண் மருத்துவம் மூலம் ஒளியேற்றுகிறது கோவை சங்கரா கண் மருத்துவமனை.கோவை மட்டுமின்றி இந்தியாவில் மாநிலங்களில் கண் சார்ந்த மருத்துவ சேவையை வழங்கி வருகின்றதுசங்கரா கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.வி.ரமணிக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அவரைச் சந்திக்க ஒரு இனிய மாலை வேளையில் அவரது இல்லத்துக்கு சென்றிருந்தேன்பூங்கொத்துகளும்மாலைகளும் நிரம்பி வழிந்த வரவேற்பறை என்னை வரவேற்றதுபூக்களின் அதே இன்முகத்துடன் வரவேற்றார் மருத்துவர் ஆர்.விரமணி. 45  வருடங்களுக்கும் மேலாக தொடரும்மருத்துவப் பயணம் குறித்து கலந்துரையாடினேன்

1931-ல் கோயம்புத்தூரில் இருந்த மூன்று மருத்துவர்களில் ஒரு மருத்துவர் என் தந்தை ஏ.விராமநாதன்கோயம்புத்தூர் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர்காரணம், 1942-ல் கோயம்புத்தூர் ப்ளேக் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டதுபலர் ஊரையே காலி செய்து சென்று கொண்டிருக்கும் வேளையில்அப்போதிருந்த சில சுய பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக் கொண்டு ப்ளேக் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தவர் என் தந்தைகாந்தி பார்க் அருகில் இருக்கும் தெலுங்கு வீஎங்களது பூர்வீக வீட்டில் ஒரு க்ளினிக் நடத்தி வந்தார் என் தந்தைஎனக்கு பத்து வயதிருக்கும் பொழுது ஒரு நாள் அவருடன் காரில் சென்று கொண்டிருந்தேன்.எங்களது காரைக் கண்டவுடன் அந்தப் பகுதி மக்கள் எழுந்து மரியாதை செலுத்தத் துவங்கினர்அக்கணமே முடிவெடுத்தேன் மருத்துவராகி மக்கள் சேவை செய்ய வேண்டும் என்றுபல தடைகளைத் தாண்டி மருத்துவம் படிக்கச் சென்றேன்ஆனால் என் முதலாமாண்டு படிப்பின் போதே அப்பா காலமானார்குடும்பத்துக்கு மூத்த மகன் என்பதால் குடும்பப் பொறுப்பினை ஏற்க வேண்டிய சூழல்சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ராதாவை கரம் பிடித்தேன்

சங்கரா கண் மருத்துவமனை எப்படி துவங்கியது?

சங்கரா கண் மருத்துவமனை காஞ்சி சங்கராச்சாரியாரின் சங்கல்பம்நானும் என் மனைவியும் திருமணத்திற்கு பிறகு அப்பா க்ளினிக் வைத்திருந்த இடத்தில் மருத்துவர் ராமனாதன் நினைவு மருத்துவமனை நடத்தி வந்தோம்அப்பா மீதிருந்த நன்மதிப்பால் எங்களிடம் மருத்துவம் பார்க்க தினம் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்இருந்தும் என் வாழ்வில் செய்யத் தவறிய ஒரு கடமை இருப்பதாகவேஒரு போதாமை இருந்து வந்தது

அப்போது ஆர்.எஸ்.புரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதலின் படி காமாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்டு வந்தது. அங்கு இலவச மருத்துவ சேவை மையம் ஒன்றும் அமைய இருப்பது தெரிய வந்ததுயதார்த்தமாக அக்கோவிலின் அறங்காவலர் பட்டாபிராமன் ஐயரைச் சந்திக்க நேர்ந்த போது அந்த இலவச மருத்துவ சேவை மையத்தினை நான் எடுத்து நடத்து விரும்புவதாக தெரிவித்தேன்அவரும் மகிழ்ச்சியாக வரவேற்றார்
ஒரு செயலைச் செய்யும் முன் அதில் உள்ள சாதக பாதகங்களை அலச வேண்டும்துவங்கிய பின் சிறு பிரச்சனையால் அச்செயல் தடைபட்டு விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன். 1970-களில் மருத்துவத்துறையில் அரசு மற்றும் தனியார் மட்டுமே இருந்தனர்.தன்னார்வ மருத்துவ சேவை போன்றவை முன்னுதாரணமாக யாரும் எங்களுக்கு இருக்கவில்லைமருத்துவ மையம் மக்களுக்கு முழுமையாக பயனளிக்க வேண்டும் எனத் தீவிரமாக திட்டமிட ஆரம்பித்தேன்

இது நான் என் மனைவி மட்டும் செய்ய முடிகிற விஷயமில்லை என என் சக மருத்துவ நண்பர்களை அழைத்து இலவச மருத்துவ சேவை மையத்தினைக் குறித்து தெவித்தேன்அவர்களும் இணைந்தனர்மருத்துவம் மட்டுமல்ல மருந்துகளும் இலவசமாக வழங்கினர்வாரத்தில் இரண்டு மணிநேரம் மட்டும் மருத்துவம் பார்க்க அழைப்பு விடுத்தேன்.  மருத்துவ உதவிகள் செய்ய தன்னார்வலர்கள் இணைந்து கொண்டனர்டேபிள்சேர்என அனைத்தும் என் நண்பர்கள் ஒவ்வொருத்தராக கொடுத்தனர்இரண்டு சிறு அறையில் மருத்துவ மையம் துவங்கியது.காஞ்சி சங்கராச்சாரியார்மருத்துவம் பார்த்து மருந்தும் நீ கொடுப்பதால் ஐம்பது பைசா வாங்கிக் கொள்ஏழைகளால் ஐம்பது பைசா கொடுக்க முடியும்அவர்களுக்கும் தன்னுடைய வியாதிக்கான மருத்துவத்துக்கு கட்டணம் கொடுத்த எண்ணம் இருக்கும்அதனால் கட்டணமாக ஐம்பது பைசா வசூலித்தோம்

1977-ல் ஆரம்பித்த இந்த இலவச மருத்துவ மையம் கோயம்புத்தூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று பல பகுதிகளில் இருந்து சாதிமத பாகுபாடின்றி இங்கு வந்து மருத்துவம் பார்த்தனர்.அதன் பின் ரோட்டரிலயன்ஸ் க்ளப் போன்ற அமைப்புக நிதி மற்றும் மருத்துவ உதவிகள் கிடைத்தனக்ளினிக்கல் லேப்எக்ஸ் ரே என விரிவுபடுத்தினோம்ராவ் மருத்துவமனையின் உரிமையாளர் மேஜர் ராவ் அவருடைய மருத்துவமனையில் அறுவை சிகிழ்ச்சை செய்ய இடமளித்தார்பத்து மருத்துவர்களுடன் ஆரம்பித்து ஐந்து வருடத்தில் 75 மருத்துவர்களானோம்கோவை பி.எஸ்.ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆரம்ப சுகாதார மையம் ஆரம்பித்து எங்களுடன் இணைந்து கொண்டனர். 9 ஆரம்ப சுகாதார மையங்கள் மூலமாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு மருத்துவம் பார்க்கத் துவங்கினோம் பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து மருத்துவ மையம் தனியாக இருக்கட்டும் என்றார்ஆகவே  ஸ்ரீ காஞ்சி காமகோடி மெடிக்கல் டிரஸ்ட் ஆரம்பித்தேன்

1985-களில் தமிழ்நாடு அரசு கிராமம் மற்றும் நகரங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள் நிறைய அமைத்தனர்ஆகவே அரசு செய்வதையே நாம் செய்ய வேண்டாம் ஏதேனும் சிறப்புப் பிரிவு எடுத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம்அப்போது தான் கண் மருத்துவம் தேர்ந்தெடுத்தேன்அதற்கு இரண்டு காரணங்கள்கண் மருத்துவத்திற்கு இந்தியாவில் அதிக தேவை இருந்ததுஉலகில் கண் பார்வை இழந்தவர்களில் மூன்றில் ஒரு பாகம் நம் இந்தியாவில் தான் உள்ளார்கள் என்பதேமேலும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு பெரும்பாலும் அதனை சரி செய்து விடலாம் என்பது கூட தெரியாமலே இருப்பவர்கள் இருந்தார்கள்கண்ணுக்கு பார்வை கொடுப்பதால் ஒரு நோயாளிக்கு உடனடியாக அவர் வாழ்வில் மாற்றம் ஏற்படுவதை நாமும் கண் கூடாக பார்க்கலாம்

கண் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றவுடன் எங்களது குடும்ப நண்பர் நடராஜன (சரோஜினி நடராஜ் டிரஸ்ட் பத்மனாபனின் தந்தை),அவருக்கு சொந்தமான ஐந்தரை ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கினார். `மேலும்மேஜர் ராவ்ஜி.வி.ஈஸ்வர்பண்ணாரி சுகர்ஸின் தலைவர் எஸ்.விபாலசுப்ரமணியம்,ரோட்டரி செண்ட்ரல் எனப் பலர் சங்கரா கண் மருத்துவமனை அமையக் காரணமாக அமைந்தனர்

இந்த மருத்துவமனையின் ஒவ்வொரு செங்கலும் கோயம்புத்தூர் மக்களால் கட்டப்பட்டது
பல்வேறு மக்களின் பங்களிப்போடு துவங்கிய சங்கரா கண் மருத்துவமனை மூ ஏழைஎளிய மற்றும் கிராமப்புற மக்களுக்கு தரமான கண் சிகிச்சை கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம்பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் கண் சார்ந்த நோய்களுக்கு சிறப்பான மிகுந்த கவனத்துடன அவர்களைத் தேடிப்போய் மருத்துவம் பார்க்கிறோம்.  

உங்கள் மனைவியின் பங்களிப்பு எத்தகையது?

இலவச மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். பக்கபலமாக ஆரம்பம் முதல் இன்றளவும் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர். எனது வெற்றிக்கும், சங்கரா கண் மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டுக்கும் முக்கியமான காரணமாக விளங்குபவர்.

உங்களது தலைமுறையினர் பெரும்பாலும் லட்சியவாதத்தாலும் தியாகத்தாலும் உருவானது.இன்று அடுத்தடுத்து பல தலைமுறையினர் உங்களோடு இணைந்து பணியாற்றுகின்றனர் இல்லையா?

எங்களது நிறுவனத்தில் விரைவில் வேலையை விட்டு செல்பவர்கள் மிக மிகக் குறைவுசுமார் 30 வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் ஊழியர்கள் ஏராளம்எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய வரும் நபர்களுக்கு முதலில் நாம் செய்வது வேலை அல்ல சேவை என்பதை புரிய வைக்கின்றோம்ஒளியிழந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் மகத்தான சேவையை செய்கிறார் என்ற உணர்வை ஏற்படுத்துகிறோம்.ஒரு நர்ஸ் கூட நோயாளிகளை பேர் சொல்லி அழைப்பதில்லைபாட்டிதாத்தா என்றே அன்புடன் அழைப்பார்கள்.  நம் ஊழியர்கள் பிறரிடம் மரியாதையாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் ஊழியர்களிடம் முதலாளி மரியாதையும் அன்பும் செலுத்த வேண்டும்தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழிஆகவே மருத்துவர்கள் முதல் மருத்துவமனையின் அடிமட்ட ஊழியர்கள் வரை ஒரே நோக்கத்துடன் செயல்படுமாறு எங்களுடைய பணி கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்றைய இளைய தலைமுறையினரும் எங்களின் நோக்கம் அறிந்தே செயலாற்றுகிறார்கள். இதர மாநிலங்களில் இருக்கும் எங்களது மருத்துவமனையிலும் ஊழியர்களுக்கும் மக்கள் சேவை குறித்த விழிப்புணர்வினை ஆரம்பகட்ட முதலே உணர்த்துகின்றோம். 

கண் சிகிழ்ச்சையில் இந்தியா எத்தகைய முன்னேற்றத்தை அடைந்துள்ளதுஇந்தப் பாதையில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் என்னகண் தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே போதிய அளவில் உள்ளதா?

சர்வதேச அளவில் கண் சிகிச்சையில் பிற நாடுகளைவிடவும் இந்தியா முன்னோடியாக உள்ளதுநம் நாட்டில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகமாகவே உள்ளதுஆனாலும் பற்றாக்குறை இருக்கத்தான் செய்கிறது
சங்கரா கண் மருத்துவமனை ஆரம்பித்தவுடன் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் துவங்கினேன்அப்போது போதிய விழிப்புணர்வு பொது மக்கள் மட்டுமின்றி மருத்துவர்களிடத்திலும் இல்லாமல் இருந்ததுஆனால் காலப்போக்கில் விழிப்புணர்வு ஏற்பட்டது.தற்போது எங்களது மருத்துவமனையில் தினசரி ஒரு கண் தானம் பெறுகிறோம்.இதை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்ஒருவர் இறந்தவுடன் கண்களை தானமாகக் கொடுக்க மக்கள் மேலும் முன்வர வேண்டும்

தன்னலமற்ற சேவைக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.இதற்கு முன்னரும் பல்வேறு உயரிய விருதுகள் கவுரவிக்கப்பட்டுள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?

மகிழ்ச்சியாக உள்ளேன்நாம் ஒரு வேலையச் செய்யும் பொழுது சரியாகத் தான் செய்கிறோமா என்ற எண்ணம் வந்து செல்லும்.இது போன்ற விருதுகள் அங்கீகாரங்கள் வரும் பொழுது நாம் செய்யும் செயலும்போகும் பாதையும் சரியே என்று உணர்த்துகிறது.இதனால் அடுத்த தலைமுறையினரும் மகத்தான சேவைகளில் ஈடுபட உந்துதலாக இருக்கும்

உங்களின் தனிப்பட்ட ஆர்வங்கள் என்ன?

இசை கேட்பது, திரைப்படங்கள் பார்ப்பது, விதவிதமான உணவுகள் உண்பது என் தனிப்பட்ட ஆர்வம். என் நண்பர்களுடன் இருப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எங்கள் நண்பர்கள் குழுவுக்கு மூஃபு மான்ஸ்டர்ஸ் ( mofoo monsters ) என்று பெயர். நல்ல திரைப்படங்களும், நல் உணவும் எங்கள் குழுவுக்கு அலாதிப் பிரியம். இந்தியாவில் சரித்திரப் புகழ்மிக்க இடங்களுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வோம். உள்நாடு வெளிநாடு என நண்பர்களுடன் பயணங்கள் செய்வது என் ஆர்வங்களில் ஒன்று. 

ஸ்டார்ட் அப், மேக்கின் இந்தியா என இளம் தலைமுறையினர் தொழில்முனைவை நோக்கி பாய்ந்து செல்லும் காலமிது. இளம் தொழிலதிபர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

உங்களுடைய நிறுவனம் பொருளோ, சேவையோ ஒரு பிரச்சனைக்கான தீர்வினை முழுமையாக வழங்க வேண்டும். அதைத் தவிர்த்து வரும் எந்த ஒரு நிறுவனமும் நீண்ட காலத்துக்கு வெற்றி பெறாது. ஒரு செயலைச் செய்யும் முன் அதில் உள்ள சாதக பாதகங்களை சீராக ஆராய வேண்டும். துணிந்த இறங்கிய பின் நேர்நோக்கிய பார்வையே தடைகளை உடைத்தெறிய வேண்டும். தலைவன் முதல் கடைநிலை ஊழியன் வரை தாங்கள் செய்யும் வேலையின் தெளிவும், புரிதலும் இருக்க வேண்டும். மேலும் அறத்தை மீறிய எந்தச் செயலும் செய்யக் கூடாது. அறமே தொழிலின் உரம்.

என்.திருக்குறள் அரசி
நன்றி: இந்து தமிழ்திசை

Comments